புளியங்குடியில் நகராட்சி ஆணையாளர் உள்பட 88 பேருக்கு கொரோனா தடுப்பூசி

புளியங்குடி, பிப். 24:  புளியங்குடியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி ஆணையாளர் குமார் சிங் தலைமையில் வாசுதேவநல்லூர்  அரசு மருத்துவமனை  மருத்துவர்  ராஜ்குமார் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 20ம் தேதி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டநிலையில் 2ம் கட்டமாக நேற்று முன்தினம் (22ம் தேதி) இரண்டாவது நிலையாக  நகராட்சி ஆணையாளர், குமார் சிங், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 88 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட்து.

 இதில் புளியங்குடி நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி நகராட்சி பொறியாளர் சுரேஷ் மேலாளர். சண்முகவேல், கணக்கர் புஷ்பநாதன்,  சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன்,மேற்பார்வையாளர்கள் அண்ணாதுரை, திருமலை வேலு, விஜயராணி, நகராட்சி பணியாளர்கள்,  களப்பணி உதவியாளர் , தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்,  பரப்புரையாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>