காரிமங்கலம், ஏப்.22:காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 800 ஆடுகள், 500 மாடுகளை கொண்டு வந்தனர். ரூ.90 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. ரூ.82 லட்சத்திற்கு மாடுகள் மற்றும் ரூ.3 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனையானது. நேற்றைய சந்தையில் சுமார் ரூ.1.75 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், திங்கட்கிழமை நடந்த சந்தையில் ரூ.16 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.
