×

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுகவினருக்கு வேட்டி, சேலை இசக்கி சுப்பையா வழங்கினார்

வி.கே.புரம், பிப். 24: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுகவினருக்கு இலவச வேட்டி, சேலைகளை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா வழங்கினார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா தென்காசியில் நடந்தது. தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா, அம்பை தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அதிமுகவினருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்.
 விழாவில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் செவல் முத்துசாமி, பார்வதி பாக்கியம், கலை இலக்கியப் பிரிவு மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, வக்கீல் சுரேஷ், கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Jayalalithaa ,Ishaq Subbaiah ,
× RELATED ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்