×

தேர்தலில் போட்டியிட ரூ.10 கோடி கேட்ட புஸ்ஸி ஆனந்த்: தவெக நிர்வாகி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை: தேர்தலில் போட்டியிட புஸ்ஸி ஆனந்த் ரூ.10 கோடி கேட்டதாக தவெக நிர்வாகி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலத்தில் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சந்தித்த தவெக நிர்வாகி பிரபு தேர்தலில் போட்டியிட தன்னிடம் ரூ.10 கேட்டதாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 2024ம் ஆண்டு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தேன். பிறகு 19.12.2024ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தன்னை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிற்க வேண்டும் எனவும், அனால் மக்களுக்கு இப்பொழுதியிலிருந்து சேவை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் ரூ.80 லட்சம் வரைக்கும் என்னற்ற நலத்திட்ட உதவிகள் செய்துள்ளேன். பிறகு புஸ்ஸி ஆனந்த் தன்னை ரூ.10 கோடி செலவுசெய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முகம்மது பர்வேஸ் இன்னொரு தொகுதிக்கு ரூ.2 கோடி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதேபோல் தவெக சார்பில் கடந்த பிப்ரவரியில் விருப்பமனு வெளியிட்டனர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் ஒரு வருடத்திற்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்துவிட்டார் என கட்சியின் உயர் நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே புஸ்ஸி ஆனந்த் மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றும் நோக்கில் விருப்பமனுவுடன் ரூ.10,000 பெற்றுக்கொண்டார். சுமார் 6000க்கும் மேல் விருப்பமனு கொடுத்து 5 முதல் 6 கோடி மேல் மோசடி செய்துள்ளார். மேலும் விருப்பமனு வாங்கிய யாரையும் நேர்காணல் எடுக்கவில்லை. இதில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே விருப்பமனு வாங்கிய நபர்களிடம் இருந்து வசூல் செய்து மோசடி செய்த பணத்தை அனைத்தையும் உரியவர்களிடம் திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோல் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தலைவர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pussi Anand ,Thaveka ,Chief Electoral Officer ,Chennai ,Prabhu ,Archana Patnaik ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...