5 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், பிப்.24: வேலூர் மாவட்டத்தில் 5 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அணைக்கட்டு துணை தாசில்தார் ெமர்லின்ஜோதிகா, வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றிய நதியா கலெக்டர் அலுவலகத்தில் ஜி பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் ஜி பிரிவு தலைமை உதவியாளராக இருந்த துளசிராமன், பி பிரிவு தலைமை உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய மகேஸ்வரி, வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பறக்கும் படை தனித்துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் இவர், குடியாத்தம் மண்டல துணை தாசில்தாராகவும் கூடுதலாக செயல்படுவார். காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணியாற்றிய ஜெயந்தி, அதே அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>