×

எடப்பாடி தொகுதி தேர்தல் அதிகாரி நட்ராஜ் மீது திமுகவினர் பரபரப்பு புகார்

சேலம்: எடப்பாடி தொகுதி தேர்தல் அதிகாரி நட்ராஜ் மீது திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். எடப்பாடி தொகுதி கட்டிநாயக்கன் பட்டி அதிமுக கிளை செயலாளரிடம் இருந்து 1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக பதிவு செய்ய தேர்தல் அதிகாரி மறுப்பதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். சாலையில் கிடந்த பணத்தை எடுத்து அதிமுக நிர்வாகி ராஜூ தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்ததாக பதிய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

Tags : Edappadi ,Natraj ,Salem ,Eadapadi Constituency ,Kattinayakan Patti Atamuga ,Branch ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...