தாராபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம்.பிப்.23:  தாராபுரம் நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது,தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது, சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கும்அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது 5 புதிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக உருவாக்கி அதற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவிப்பது.  

ஜெயலலிதாவின் பிறந்த நாளைமாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் மூலனூர் ஒன்றியசெயலாளர். பெரியசாமி, காங்கயம் ஒன்றியச் செயலாளர் நடராஜன் ஆவின் பால் துணைத்தலைவர் சிவகுமார், இளஞ்செழியன், கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார் ஜெகநாதன், ஆறுச்சாமி, மணி, எம்.டி. மகேந்திரன், ராமகிருஷ்ணன், மகளிர் அணி ரேவதி உள்ளிட்டநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>