- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- கந்தர்வகோட்டை யூனியன்
- குருங்குளம் உத்தாநகர் அண்ணா சக்கரை
- தஞ்சி மாவட்டம்
கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடியில் மும்முரமா ஈடுப்பட்டுவருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலையில் பதிவு செய்து கரும்பு பயிர்செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கரும்புவெட்டி ஆலைக்கு அனுப்பிய நிலையில் இரண்டாம் பருவ பயிர் துளிர்ந்து வருகிறது. இப்பகுதியில் போதிய மழையில்லாதாதல் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறார்கள்.
விவசாயிகள் கூறும்போது இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது எனவும், கரும்பு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சபோதிய நீர் இல்லை என்றும் ஆகையால் இப்பகுதிக்கு காவேரி – வைகை- குண்டாறு இணைப்பு திட்டதை விரைவுபடுத்தி இதில் கிளை வாரி வெட்டி கந்தர்வகோட்டை ஒன்றியமும் பயன் அடையும் நிலைக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
மேலும் ஒன்றிய அரசு கரும்புக்கு கூடுதல் ஊக்கதொகை வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி சக்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், சக்கரை ஆலையில் ஒதுங்கும் கழிவுகளை போட்டி பகிரங்க ஏலம் விட்டு அதனை கரும்பு விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க ஆலை நிர்வாகம் முன்வரவேண்டும் என்றும், இவ்வாறு கூடுதல் லாபம் கிடைந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கரும்பு விவசாயத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.
