×

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ராசா எம்.பி. சுற்றுப்பயணம்

கூடலூர்,பிப். 24: கூடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம், தெப்பக்காடு, பாடந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி எம்.பி.ராசா நேற்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஒன்றிய செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மசினகுடி வாழைத்தோட்டம் பகுதிகளில் தி.மு.க கொடியேற்றி மறைந்த மூத்த நிர்வாகிகளின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெப்பக்காடு ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து உடன் வந்த எம்.எல்.ஏ., திராவிட மணியிடம் பிரச்னைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து தொரப்பள்ளி பகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து கூடலூர் வந்த அவருக்கு கூடலூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பாடந்துறை பஜாரில் கொடியேற்றி பொதுமக்களின் குறைகளை கேட்டார். இங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 600 குழந்தைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மதிய உணவு வழங்கி அவர்களுடன் உணவருந்தினார். இதனைத் தொடர்ந்து பந்தலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, நெலாக்கோட்டை, பாட்ட வயல் பகுதிகளில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் மாவட்ட செயலாளர் முபாரக், எம்.எல்.ஏ. திராவிடமணி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், கூடலூர் பந்தலூர் நகர செயலாளர்கள் ராஜேந்திரன், காசிலிங்கம், பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, கவுன்சிலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நவ்பல், சேகர், மகளிரணி கோமதி, ஜெயா, பாத்திமா, ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, காந்தி செல்லதுரை, பாபு, முருகையா, மாதேஷ், சுப்ரமணி, நகர இளைஞரணி மணிகண்டன்.  நிர்வாகிகள் மகேஷ், செல்வரத்தினம், ஆலன், கூடலூர் நகர நிர்வாகிகள்  ரசாக், இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Rasa MP ,Kudalur ,Pandharpur ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...