இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்

கோவை, பிப்.24:.கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.கோவை, கணபதியில் நடந்த செய்ற்குழு கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர் குமார் முன்னிலை வகித்தார். இதில் வரும் மார்ச் 4ம் தேதி கோவை கோனியம்மன் கோயில் திருவிழா நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக  மாவட்ட நிர்வாகம் தேர்த்திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்த்திருவிழாவின் போது அதிக ஒலி எழுப்ப கூடிய விசில் விற்பனையை போலீசார் தடுக்க வேண்டும். மேலும் இந்து முன்னணியின் முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் பிறந்தநாளை சமுதாய சமர்ப்பணமாக கொண்டாடுவது என்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் தசரதன், நிர்வாக குழு உறுப்பினர் குணா, செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், பேச்சாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>