×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

 

வருசநாடு, ஏப்.21: கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சிறப்பாறை, வண்ணாத்திப்பாறை, உப்புத்துறை, ஆத்துக்காடு, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் நாட்டுமாடு, எருமைமாடு, பசுமாடு, வெள்ளாடு, செம்பரிஆடு, சீமைஆடு, சிந்துமாடு, உள்ளிட்ட கால்நடைகள் ஏராளமான கிராம பொதுமக்கள் கடமலை மயிலை ஒன்றியத்தில் வளர்ப்பு பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இதில் குறிப்பாக மலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட வேலையாக ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள்.  ஆனால் வருடத்தில் மூன்று மாதங்கள் அதிக பனிப்பொழிவுகள் காரணமாக கார்த்திகை, மார்கழி, தை, உள்ளிட்ட மாதங்களில் கால்நடைகளுக்கு காண நோய் மற்றும் தமிழ்மாதங்கள் மாசி, பங்குனி, சித்திரை, மூன்று மாதங்கள் மிகவும் வெப்பத்தின் காரணமாக மாடுகளுக்கு அம்மைநோய் , வெண்புள்ளி உஷ்ணம், உணவுசெரிமான கோளாறு, மஞ்சக்காமாலை, ரத்தக்கழிச்சல், நோய் உள்ளிட்ட நோய்கள் கால்நடைகளுக்கு அதிக அளவில் பரவி வருகிறது.

Tags : Kadamalai-Mayilai union ,Varusanadu ,Kadamalai ,Mayilai union ,Sindhu ,Kandamanoor ,Kadamalaikundu ,Mayiladumparai ,Sirapparai ,Vannathiparai ,Upputhurai ,Athukkadu ,Gandhigramam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...