×

அபிராமி கிட்னி கேர் சென்டரில் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்

ஈரோடு, பிப். 24:   ஈரோடு பெருந்துறை ரோட்டில் அபிராமி கிட்னி கேர் சென்டர், டாக்டர் தங்கவேலு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் புதிதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது.இந்த சிகிச்சை பிரிவு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையுடன் இணைந்து துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவுக்கு, அபிராமி கிட்னி கேர் சேர்மேன் டாக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கிளனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி கல்லீரல் மாற்று திட்ட இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ், இளநிலை ஆலோசகர் டாக்டர் சதீஷ்குமார், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் பெருமாள் கர்ணன் ஆகியோர் பேசினர்.   இதில், அரசு சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கோமதி, எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம், ஐ.எம்.ஏ மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் டாக்டர் பூர்ணிமா சரவணன் நன்றி கூறினார்.  இது குறித்து அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘‘மது, நீரிழிவு, உடல் பருமன், கல்லீரலில் கொழுப்பு சேர்தல், எடை குறைதல், வாந்தி, தோலின் நிறம் மஞ்சளாக மாறுதல் போன்றவைகள் கல்லீரல் நோய்க்கான பல்வேறு காரணிகள் ஆகும். கல்லீரல் மாற்று சிகிச்சை 95சதவீதம் வெற்றிகரமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Abrami Kidney Care Center ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு