×

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்: திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஓவைசி அறிவிப்பு

 

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி. இவர் பல்வேறு மாநிலங்களில் தனித்து போட்டியிட்டு வந்தார். இதனால், இஸ்லாமியர்களுக்கு இவரது கட்சிக்கு விழுந்து ஓட்டு பிரிந்தன. இது, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் போன்ற பல மாநிலங்களில் பாஜ கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவாக இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த சூழ்நிலையில், அசாதுதீன் ஓவைசி வெளியிட்ட வீடியோவில், ‘‘ஏஐஎம்ஐஎம் தொண்டர்கள் தங்களது ஓட்டுகளை திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், திமுக கூட்டணிக்கு தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை செலுத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்’’ என்று கூறி உள்ளார்.

Tags : MK ,Stalin ,DMK alliance ,Owaisi ,AIMIM ,Asaduddin Owaisi ,BJP alliance ,Andhra Pradesh ,Maharashtra ,Bihar.… ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...