×

ஈ.வி.கே சம்பத் நினைவு நாள் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு, பிப். 24:  தி.மு.க.வின் மூத்த தலைவர் ஈ.வி.கே சம்பத்தின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் உள்ள ஈ.வி.கே சம்பத்தின் உருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, மாதேஷ்வரன், பொதுசெயலாளர்கள் கண்ணப்பன், சச்சிதானந்தம், விவசாய பிரிவு பெரியசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாஷா, நெசவாளர் அணி மாரிமுத்து, ஸ்டார் விஜய்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : EVK Sampath Memorial Day Congress ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு