×

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி

 

சென்னை: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. கிள்ளியூரில் 4 தாலுகாக்களில் அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க ஒன்றிய அரசின் IREL நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க 2024ல் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் குமரி மாவட்ட மீனவர்கள் அணுக் கனிம சுரங்கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பை அடுத்து 2024 அக்டோபரில் நடத்த இருந்த கருத்துகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அணு கனிமங்களை வெட்டி எடுக்க கருத்துக் கேட்பு நடத்த வேண்டியதில்லை என 2025ல் ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் அறிவிப்பை அடுத்து குமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மீண்டும் முயற்சி செய்துள்ளது. தமிழ்நாடு அரசு, குமரி மக்களின் எதிர்ப்பை உதறித் தள்ளிவிட்டு அணுக் கனிம சுரங்கம் அமைக்க முயற்சி செய்து வருகிறது. குமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசின் IREL நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது.

பொதுமக்களின் கருத்தை கேட்காமல் குமரி கடற்கரையை பாஜக அரசு சூறையாட முயற்சிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள், மாநில அரசின் கருத்தை கேட்காமல் அணுக் கனிம சுரங்கம் அமைப்பதா? அணுக் கனிம சுரங்கம் அமைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags : Union BJP government ,Kanyakumari ,Tamil Nadu government ,Chennai ,BJP government ,Union government ,IREL ,Killiyur.… ,
× RELATED தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்;...