×

தமிழ்நாட்டின் வெற்றிக்கு திராவிட தலைவன் இருக்கிறான்: தேர்தல் பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் ‘‘தலைவன் இருக்கிறான்’’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரைப் பாடலை எழுதிப் பாடி, தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் இந்தப் பாடல் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். அந்த காணொலியில், இன்று அறிவார்ந்த தமிழ் மக்கள் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. அதன் விளைவுதான் ‘‘தலைவன் இருக்கின்றான்’’ என்ற பாடல். அதில் ஒரு வரி, ‘‘என்றும் தமிழகம் வென்றிட வேர்விட விதையாய் செடியாய் மரமாய் காடாய் வீடாய் நாடாய் உலகாய் விரிந்திட வாழ்த்துதுமே வாழ்த்துதுமே..’’ என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

‘‘தலைவன் இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான், எங்கள் தலைவன் இருக்கின்றான் திராவிட தலைவன் இருக்கின்றான், தலைவன் இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான், தலைவன் இருக்கின்றான் திராவிட தலைவன் இருக்கின்றான். இந்திய நாட்டின் மூலை முடுக்கில் தலைவன் இருக்கின்றான், எங்கள் வருங்கால மாத்திடம் படையாய் நிற்கின்றார், திராவிட படையாய் நிற்கின்றார், வெல்லும் படை இது விலகிடு விலகிடு வெல்லும் வரவர, என்றும் நமதே நாளை நமதே என்றும் நமதே நாளை நமதே’’ என்ற வரிகளுடன் அந்தப் பாடல் அமைந்துள்ளது.

Tags : Tamil Nadu ,Kamal Haasan ,Makkal Needhi Maiam ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...