×

துரோகங்கள் களை எடுக்க வேண்டும்: நான் சசிகலா ரத்தம்; தம்பியான நவரச நாயகன்

சிவகங்கை தொகுதியில் சசிகலாவின் கட்சியான அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பேசியதாவது: சசிகலா வந்த பிறகு தான் அரசியல் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அவரிடம் பழிவாங்கும் எண்ணம் சுத்தமாக கிடையாது. அவர் ஒருவரை நியமிக்கிறார். அவர் அவரை கைவிடுகிறார். பசும்பொன்னில் சசிகலாவை சந்தித்த பிறகு அவர் எவ்வளவு துயரப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்த பிறகு, ஒரு தம்பியாக என்னால் சும்மா இருக்க முடியவில்லை. தோப்போடு, தென்னந்தோப்போடு நாமும் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் வந்தேன். இதை கூட்டணி என்பதை விட குடும்பம் என்று கூறவேண்டும். சத்தியம் ஜெயிக்க வேண்டும். சசிகலா ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் அவருடைய ரத்தம். நானும் அப்படித்தான். அது தான் அந்த பாசம் தான்.

இரண்டு விரலை காட்டினோம். இனி நான்கு விரலை காட்டுவோம். தம்பியுடையான் படைக்கு அஞ்சான். இந்த தம்பி உங்களோடு இருக்கிறேன் என கூறினேன். தமிழக மக்கள் அனைவரையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். அரவணைத்துச் செல்ல வேண்டும். தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி இருக்கிறார். இந்த நேரத்தில நாம், நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும். அதர்மம் தலைதூக்கும்போது, யாம் அவதரிப்போம்னு கீதையில் சொன்ன மாதிரி, இப்போது சசிகலா வந்திருக்கிறார். துரோகங்கள் களை எடுக்கப்பட வேண்டும். இவரை ஆதரிக்காவிட்டால் நம்முடைய மக்களுக்கு, எதிர்கால சந்ததியினருக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்காது என்பதுதான் சத்தியமான உண்மை. வீரமங்கை வேலுநாச்சியார் மறையவில்லை. மீண்டும் அவதரித்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) சேலம்
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) பெரும்புதூர்
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) கடையநல்லூர்
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சாத்தூர்
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) திருவொற்றியூர்
மு.வீரபாண்டியன்
(சி.பி.ஐ. மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) காட்டுமன்னார்கோவில்
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) விருத்தாசலம்
அன்புமணி (பாமக தலைவர்) சேலம், தர்மபுரி
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) கும்பகோணம்
சீமான்
(நாதக ஒருங்கிணைப்பாளர்) காரைக்குடி
டி.டி.வி.தினகரன்
(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) சென்னை

Tags : Sasikala ,Navarasa Nayagan ,AIPM ,Sivaganga ,Karthik ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...