×

தக்காளி கிலோ ரூ.28 ஆக அதிகரிப்பு

தர்மபுரி, ஏப்.21:கோடை வெயிலால் மகசூல் பாதிக்கப்பட்டதால், தக்காளி விலை கிலோ ரூ.28 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். தர்மபுரி அடுத்த பாலக்கோட்டில் தக்காளி மார்க்கெட் மூலம் தக்காளி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த மாதம் தக்காளி உற்பத்தி அதிகரித்து, தர்மபுரி உழவர் சந்தைக்கு தினமும் 5 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ பெங்களூரு தக்காளி ரூ.8க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி காய்கறி மார்க்கெட்டுகளிலும் தக்காளி மலை போல் குவிந்தது.

தக்காளி விலை சரிவால் நுகர்வோர் அதிகளவில் வாங்கி சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி வருகிறது. இதனால் மூக்கனூர், ஒடசல்பட்டி, மோளையானூர் செட்டிக்கரை, குன்செட்டிஅள்ளி, நவலை போன்ற பகுதிகளில் வெயில் காரணமாக தக்காளி மகசூல் வெகுவாக பாதித்துள்ளது. தக்காளி வளர்ச்சி இல்லாத காரணத்தால் பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டு விட்டனர். வரத்து குறைவால் ரூ.18க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி ரூ.28க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Morappur ,Palacode ,Karimangalam ,Aroor ,Papparapatti ,Pappireddipatti ,Dharmapuri… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...