தூத்துக்குடி மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்று பயிற்சி முடித்த 14 எஸ்ஐக்கள் கலந்தாய்வு மூலம் பணி நியமனம்

தூத்துக்குடி,பிப்.23:  தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் எஸ்எஸ்ஐகளாக பணியாற்றி, பயிற்சி முடித்த எஸ்ஐகள் ராமலிங்கம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கும், ஆதிலிங்கம் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கும், காந்தி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், முத்துக்கிருஷ்ணன் மற்றும் இசக்கியப்பன் ஆகிய இருவரும் தூத்துக்குடி மத்தியபாகத்திற்கும், ரவீந்திரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், சுகுமார் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும், சண்முகசுந்தரம் மற்றும் பிரம்மராஜ் ஆகிய இருவரும் ஏரல் காவல் நிலையத்திற்கும், வெள்ளத்துரை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும், சுப்பிரமணியன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், பாலையா முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், கண்ணன் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், சூசைப்பாண்டி மணியாச்சி காவல் நிலையத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை எஸ்பி ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார். இந்த கலந்தாய்வின்போது நியமனத்தின்போது ஏடிஎஸ்பி கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி இளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>