கோவில்பட்டியில் 500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி, பிப்.23: கோவில்பட்டியில் 500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் வங்கி கணக்கினை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பாஸ் புத்தகங்களை வழங்கினார். கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கும் விழா கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்து 500 பெண் குழந்தைகளுக்கு தனது சொந்த பணத்தில் ரூ.1.25 லட்சம் வழங்கி கணக்கை தொடங்கி வைத்தார். மேலும் செல்வ மகள் சேமிப்பு கணக்கு பாஸ் புத்தகங்களை பெண் குழந்தைகளுக்கு வழங்கினார்.தொடர்ந்து கோவில்பட்டி நடராஜபுரம் 3வது வார்டு பசும்பொன்நகர், கே.நாச்சியார்பட்டி, சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம், குப்பனபுரம் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் ரேஷன் கடையினை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் க.வேலாயுதபுரம் கூட்டுறவு சொசைட்டி, வில்லிசேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி கடன் பத்திரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

 நிகழ்ச்சிகளில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சௌந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் சீனிராஜ், மற்றும் பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, வேலுமணி, ராசையா மற்றும் கோவில்பட்டி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜ், உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்தா சிந்துதேவி, சீதாலட்சுமி, மேற்கு உப கோட்ட கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், கிழக்கு உப கோட்ட ஆய்வாளர் மகேஸ்வரராஜா, அஞ்சலக ஆய்வாளர் (புகார்) கேந்திரபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>