ஞானதிரவியம் எம்பி, விஎஸ்ஆர் ஜெகதீஷ் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

ராதாபுரம், பிப். 23: ராதாபுரத்தில் ஞானதிரவியம் எம்பி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்  முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். ராதாபுரம் கிழக்கு, மேற்கு ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த ராதாபுரம் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் அதிமுகவினர், நாம் தமிழர், பாஜவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கூத்தன்குழி ராஜா ஏற்பாட்டில் ராதாபுரத்தில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாற்றுக்கட்சியினர் அனைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் விஎஸ்ஆர்ஜெகதீஷ், ஞானதிரவியம் எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.  இதில் திமுக அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மீனவர் அணி எரிக் ஜூடு, விவசாய அணி மாடசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் நாகமணி, தொண்டர் அணி துணை அமைப்பாளர் தனபால், மந்திரம், முருகன், மார்த்தாண்டம், அமைச்சியார், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜான் ரபிந்தர்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆனந்த், வள்ளியூர் பேரூர்  செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்டப் பிரதிநிதி ஆச்சியூர் ராமசாமி, நவநீத கிருஷ்ணன்,

முன்னாள் மாவட்டப் பிரதிநிதிகள் ஐ.ஆர். ரமேஷ், ராஜசேகர், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் மணி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பரிமளம், முருகன், ராமையா, கணக்கன்குளம் பொன் செல்வன்,  வர்த்தக அணி ஜெயராஜ், பெட்டைகுளம் ஞானராஜ், கூத்தன்குழி  ராஜா, ராதாபுரம் கோவிந்தராஜ், கணேசன், அகஸ்டின், ராஜ்குமார், விஜயாபதி இளங்கோ, சந்தியாகு, யேசுதாஸ், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் அசோக் செல்வன், திசையன்விளை பேரூர் முன்னாள் செயலாளர் ஜெயராஜ், இளைஞர் அணி வள்ளியூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாணவர் அணி கண்ணன், ஒன்றியப் பிரதிநிதி சிவசந்திரன், அசோக், உவரி ஜேக்கப், திசையன்விளை பேரூர் மணலி பால்ராஜ், நடராஜன், இளைஞர் அணி திசையன்விளை பேரூர் அமைப்பாளர் நெல்சன், வள்ளியூர் பேரூர் அமைப்பாளர் தில்லை ராஜா,  திசையன்விளை பேரூர் துணை அமைப்பாளர் விமலன், செந்தில், ஒன்றியப் பிரதிநிதி நசூருதீன், தோப்புவிளை டோமினிக், எழில் ஜோசப், டென்னிஸ், அப்புவிளை சுபாஷ், டென்னிஸ், வள்ளியூர் திமுக பிரமுகர் நம்பி, ராமன்குடி முத்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>