- முதல் அமைச்சர்
- முத்தராசன் சுலீர்
- விஜய்
- பொதக்குடி
- பொதுவுடைமைக்கட்சி
- இந்தியா
- Mutharasan
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- டி. ஆர் பி ராஜா...
பொதக்குடி: வெயிலில் அரைமணி நேரம் கூட நிற்க முடியாத தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் டி.ஆர்.பி.ராஜா மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பொதக்குடி, வடபாதிமங்கலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முத்தரசன் பிரதமர் மோடி குறித்தும் விமர்சனம் செய்தார். கட்சி துவக்கிய உடனேயே முதல்வராக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் நடிகர் விஜய்க்கு அரை மணி நீரால் வெயிலில் நிற்பது கூட ஒத்து கொள்ளவில்லை. கேரவனில் பொய் புகுந்து கொள்கிறார், அதிலும் ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியே வரும் நடிகர் விஜய், அடுத்த 2 நாட்களுக்கு லீவ் எடுத்து கொண்டு விடுகிறார்.
நம் முதல்வர் இந்த வயதிலும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நடிகர் விஜய்யை தவிர யாரும் வெயிலில் சென்று வாக்கு சேகரிக்க யோசிப்பது இல்லை, இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கி பம்பரமாக சுழன்று வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் நடிகர் விஜய்க்கு வெயில் ஒத்து கொள்ளதாம், வெயில் ஒத்துக்கொள்ளாத உங்களுக்கு தேர்தல் எதற்கு? வெயில் ஒத்து கொள்ளாதவர் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் முத்தரசன்.
முன்னதாக நாகப்பட்டினம் மாவட்டம் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முத்தரசன், சில நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக நின்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நடிகராக விஜய், கேரவனுக்கு வேண்டுமானால் சிஎம் ஆகலாம், ஆனால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக முடியாது என்று கடுமையாக விமர்சித்தார். பாஜக-வின் வஞ்சக வலையில் விஜய் விழுந்துவிட்டதாகவும், மதச்சார்பற்ற கூட்டணியைத் தோற்கடிக்க அவர் செயல்படுவதாகவும் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
