×

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை பலமடங்கு உயர்த்துவது ஏன்?: ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி

சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை பலமடங்கு உயர்த்துவது ஏன் என்று தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை  கண்டித்து சென்னை மேற்கு மாவட்டம் மற்றும் தென் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய  சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநி திமாறன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை.  முதலாவதாக குரல் கொடுத்தது தமிழகம் தான். திமுக சார்பில் முதலாவதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தாய்மார்களின் தலையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் மோடி. கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்து  வருமானமின்றி இருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அடியை கொடுக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சி காரணம் என்பது நியாயமா. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமில்லை என நிதியமைச்சர் பூசி மெழுகுகிறார். ஒரே கட்சியை சேர்ந்த வெவ்வேறு துறை  அமைச்சர்களும் மாறி மாறி பேசுகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை ஏன் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்து  விடலாம். தாய்மார்களின் மடியில் கைவைத்தவர்களுக்கு சரியான பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள். தமிழில் பேசும் பிரதமர், தமிழுக்கும், தமிழகத்திற்கும் என்ன செய்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : MB ,
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி