×

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்

திருவையாறு, ஏப். 20: திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டு சித்திரை விழா நாளை (21ம் தேதி) தொடங்கி வரும் மே மாதம் 3ம் தேதி வரை 13 நாள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றம் நடைபெறுகிறது.

வரும் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் வீதி உலா வருகிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

 

Tags : Chithirai festival ,Thiruvaiyaru Aiyarappar ,Thiruvaiyaru ,Sri ,Aram Valartha ,Nayaki Amman ,Dharma Atheenam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...