திருவையாறு, ஏப். 20: திருவையாறு அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவையாறு வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜராஜன் (45). இவர் கடந்த 17ம் தேதி திருவையாறு தெற்கு வீதியில் உள்ள எஸ்பிஐ பேங்க் முன்பு தனது பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு பேங்கில் தனது வேலைகளளை முடித்துவிட்டு வந்து பார்த்துள்ளார்.
அப்போது பைக்கை காணவில்லை இது குறித்து திருவையாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக விரைந்து வந்த போலீசார் பேங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது திருவையாறு திருமலை கார்டன் பெரியசாமி மகன் சச்சின் (20) திருடியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை மேற் கொண்டதில் பைக்கை திருடி நடுக்காவேரி மேல திருப்பூந்துருத்தி காளியம்மன் கோயில் தெரு மகேந்திரன் மகள் பாலமுருகனிடம் (25) கொடுத்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடுக்காவேரி காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது ஏற்கனவே பைக் திருட்டு மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
