×

பிரகாஷ்ராஜுக்கு குஷ்பு பதில்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜ மாநில துணைத்தலைவரும், நடிகையுமான குஷ்பு சுவாமி தரிசனம் செய்தார். அவரிடம் நிருபர்கள், ‘குஷ்புவிற்கே சீட் கிடைக்காதபோது, சுந்தர்.சிக்கு எப்படி சீட் கிடைத்தது என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளாரே?’ எனக் கேட்டனர். அதற்கு குஷ்பு, ‘‘பிரகாஷ்ராஜ் என் நண்பர். கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்காமல் தோற்றுப் போனார். நேரமிருந்தால் இதுகுறித்து அவரை சிந்தித்து பார்க்கச் சொல்லுங்கள்’’ என்றார்.

‘‘2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையரை மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாரே?’’ என்றதற்கு, ‘‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் மசோதாவை தாக்கல் செய்யவில்லை? பெண்களின் முதுகில் குத்துவதற்கு பதிலாக நெஞ்சில் குத்தியுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுக்காமல் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய இயலும்’’ என்றார்.

Tags : Khushbu ,Prakash Raj ,BJP ,vice president ,Khushbu Swamy ,Madurai Meenakshi Amman temple ,Prakashraj ,Sundar C ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...