திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நாளை ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ப.குமார் அழைப்பு வேண்டுகோள்

திருச்சி, பிப்.23: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதால் அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி புறநகர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதயதெய்வம், டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாளை (24ம் தேதி) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை தொகுதிகளில் அந்த பள்ளிகளில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, வட்ட கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு ப.குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>