×

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி

பேராவூரணி, ஏப்.19: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியடைந்துள்ளதற்கு தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் முனைவர் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; நாடாளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா தோல்வி அடந்துள்ளதை தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் மனதார வரவேற்கிறது.

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களை மட்டும் வைத்துக்கொண்டு தென்னிந்திய மாநிலங்களின் அதிகாரப் பகிர்வைத் தகர்க்கும் இந்த மசோதா நிறைவேறியிருந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிர்காலத்தில் கேடாக அமைந்திருக்கும். இந்த மசோதாவை எதிர்த்து முழு மூச்சுடன் போராடிய அனைத்து அமைப்புகளுக்கும், போராடத் தூண்டுகோலாய் அமைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : Peravoorani ,Tamil Nadu ,Janatha Vimukthi Yayak ,Dr. ,Jeevanandam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...