திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் திருவையாறு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவையாறு,பிப்.23: திருவையாறு அடுத்த செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் பிரபுதேவா (25). இவர் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 6 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் பிரபுதேவாவிடம் உன் தங்கை திருமணம் முடிந்தபிறகு உன் திருமணத்தை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதில் மனம் வெறுத்த பிரபுதேவா நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. நேற்று காலை பொன்னாரை சுடுகாடு அருகே மாந்தோப்பில் ஒருவர் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியது பிரபுதேவா என்பது தெரியவந்தது. தகவலறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுதேவா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More