×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப். 23: பெட்ரோல், டீசல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். திமுக இலக்கிய அணித் தலைவர் கவிதைப்பித்தன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர திமுக செயலர் நைனாமுகமது, மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் முத்துராஜா, துணை அமைப்பாளர் முத்துகருப்பன், வக்கீல் அணி அமைப்பாளர் சிவா, நிஜாம் காலனி சத்தியா உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்று
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி