பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டம்

பெரம்பலூர்,பிப்.23: நிரந்தர பணி வழங்கிட கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய ஒப் பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப் படுத்தக் கோரி, தங்களது ஆதார் அட்டை, குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய வற்றை மாவட்டக் கலெக் டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கலெக்டரிம், தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணி தலைமையில் அளித்த புகார் மனுவில், தாங்கள் மின் வாரியத்தில் 15 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி புரிந்து வருகிறோம், புயல் காலங்களில் பணியாற்றி ய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதாகவும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தால் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனா ல் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: