- ராகுல்கந்தி
- பொன்னேரி பொது கூட்டம்
- சென்னை
- பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
- திமுகா கூட்டணி கட்சி
- திமுகா
- திருவள்ளூர்
- வி.ஜி.ராஜேந்திரன்
- மாதவரம்- சுதர்சனம்
- கும்மிதிபுண்டி- கோவிந்தராஜன்
- அவதி-நசர்
- பூந்தமல்லி ஏ. கிருஷ்ணசாமி
- காங்கிரஸ்
- பொன்னேரி
- துரை
- சந்திரசேகரன்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இன்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களான திமுக வேட்பாளர்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், மாதவரம்- சுதர்சனம், கும்மிடிப்பூண்டி- கோவிந்தராஜன், ஆவடி-நாசர், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் வேட்பாளர்கள் பெரும்புதூர் செல்வப் பெருந்தகை, பொன்னேரி- துரை.சந்திரசேகரன், வேளச்சேரி- அசன் மவுலானா உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் இதயத்தில் எப்போதும் தனித்த இடம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டு மக்களோடு எனது உறவு மேம்பட்டு இருக்கிறது. எனது இதயத்தில் தமிழக மக்களுக்கு என்று தனி இடம் உண்டு. நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. எனது குடும்பம் தமிழகம் அல்ல, ஆனால் தமிழ்நாட்டுடன் எப்போதுமே என்னுடைய உணர்வுகள் ஒன்றி இருக்கிறது.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் எப்போதெல்லாம் தமிழ்நாட்டை தமிழ் மொழியை கலாச்சாரத்தை தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை சார்ந்தவனாக உணர்கிறேன். எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரம் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் தாக்குதல் நடத்துவார்கள்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தார்கள்.நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவத்தை குறைப்பதே அவர்கள் திட்டமாக இருந்தது. தென் மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களின் வலிமையயை குறைப்பதே அவர்களின் எண்ணம். அந்த மசோதாவை நாங்கள் தோற்கடித்து முறியடித்தோம்.தமிழ், வரலாறு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பாஜகவினர் அழிக்க நினைக்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் அதை செய்ய முடியாது. தமிழக மக்களின் மகத்துவம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. பாஜகவுக்கு என்ன தேவை என்றால் அவர்கள் சொல்வதை கேட்க டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள தமிழகத்தில் ஒரு கூட்டாளி தேவை.
அமித்ஷா, மோடி சொல்வதை கேட்க அவர்களின் உத்தரவை செயல்படுத்த அவர்களுக்கு ஒரு முதல்வர் வேண்டும். உலகளவில் டிரம்புக்கு இந்தியாவில் சமரசமான ஒரு மோடி எப்படி தேவையோ. அதை போன்று டெல்லி பாஜகவுக்கு தமிழகத்தில் அவர்கள் சொல்வதை கேட்க ஒரு முதல்வர் வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்துக்கு எதிரானவர்கள். தமிழ் மொழி, தமிழ் வரலாறு, கலாச்சாரத்தை பாஜகவால் தொடக்கூட முடியாது. இவ்வாறு பேசினார். இதையடுத்து பிற்பகல் 1.30 மணி அளவில் சோளிங்கர் தொகுதியில் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார். மாலை 4 மணியளவில் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் பைபாஸ் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு ஆதரவு திரட்டுகிறார். இந்த பரப்புரையை முடித்துக் கொண்டு டெல்லி செல்கிறார். மீண்டும் வரும் 20ம் தேதி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தருகின்றார்.
