×

திருமருகல் அருகே போலகத்தில் விஜயகோபாலய சுவாமிகள் ஆராதனை

நாகை, பிப்.23: பஜனை பக்திகளை அழகுபடுத்துவர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுபவர் விஜயகோபாலய சுவாமிகள். இவரது பீடம் திருமருகல் அருகே போலகத்தில் அமைந்துள்ளது. இங்கு விஜயகோபாலய சுவாமிகளின் ஆராதனை உற்சவம் வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் மத் பாகவத மூல பாராயணம், சம்ப்ரதாய அஷ்டபதி பஜனைகள், திவ்ய நாம பஜனைகள் மற்றும் பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் பாகவத பிரவசனம் ஆகியன நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வுகளாக 24ம்தேதி விஜயகோபாலய சுவாமிகளின் ஆராதனையும், 25ம் தேதி ராதா கல்யாண உத்சவமும், 26ம்தேதி ஆஞ்சநேயர் உற்சவமும் நடைபெறுகிறது.

Tags : Vijayagopalaya ,Swamis ,Polakam ,Thirumurugal ,
× RELATED எல்லை பிரச்னையால் குடிநீர் இணைப்பு இன்றி தவிக்கும் கிராம மக்கள்