×

இலவச பயிற்சி முகாம்

மதுரை, ஏப். 18: மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம், வைகை கூடைப்பந்தாட்ட அகடாமி மற்றும் மதுரை ஸ்போர்ட்ஸ் அகடாமி இணைந்து பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கலராஜா அடிகளார் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஆனந்த் அடிகளார், கூடைப்பந்து கழக பொருளாளர் சேகர், ஓய்வு இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்ஐ காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜேம்ஸ், சிவகிருஷ்ணன், தலைமை பயிற்சியாளர் அருண்சுபம், பயிற்சியாளர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இலவச கோடை கால பயிற்சி முகாம் ஏற்பாடுகளை சேர்மன் மார்த்தாண்ட பூபதி, தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக இரு வேளையும் புரோட்டின் உணவுகள் வழங்கப்படுகிறது. டி ஷர்ட் மற்றும் கூடைபந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம் மே8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என கூடைப்பந்து கழகத்தினர் தெரிவித்தனர்.

 

Tags : Madurai ,Madurai District Basketball Association ,Vaigai Basketball Academy ,Madurai Sports Academy ,Rev. ,Aadikalaraja Adigalar ,Deputy Principal ,Anand Adigalar ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...