×

பாரதிதாசன் பல்கலை., உறுப்பு கல்லூரியில் மீண்டும் தேர்வு கட்டணம் வசூல் கண்டித்து போராட்டம் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா

நாகை,பிப்.23: செமஸ்டர் தேர்வுகளுக்கு மீண்டும் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் நாகை பாரதிதாசன் பல்கலை கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் செமஸ்டர் தேர்விற்கு மீண்டும் தேர்வு கட்டணம் கேட்கப்பட்டது. ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்திய நிலையில் மீண்டும் தேர்வு கட்டண வசூலில் ஈடுபடும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நாகை பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் தேர்வு கட்டணத்தை வசூல் செய்வதை நிறுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: கொரோனா காலத்தில் தேர்வு கட்டணம் செலுத்திய பின்னர் மீண்டும் கல்லூரி நிர்வாகம் தேர்வு கட்டணம் வசூல் செய்கின்றனர். தமிழக அரசு தேர்வு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்து மாணவர்கள் தேர்வு எழுதுவதை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Tags : Bharathidasan University ,Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...