- சர்வதேச அபாகஸ் சான்றிதழ் வழங்கும் விழா
- பேராவூரணி
- ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளி
- உலகளாவிய சிறப்பு அகாடமி
- எங்களுக்கு
பேராவூரணி, ஏப்.18: பேராவூரணியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச அபாகஸ் சான்றிதழ் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்க பள்ளியில் நடைபெற்றது. அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் குளோபல் அகாடமி ஆப் எக்சலன்ஸ் அமைப்பின் வழிகாட்டுதலில், அரசு பள்ளி ஆசிரியர் காஜா முகைதீன் ஒருங்கிணைப்பில், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த 65 மாணவர்கள் இந்த ஆண்டு சர்வதேச அபாகஸ் தேர்வினை எழுதி வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா வடகிழக்கு பள்ளியில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வீர சந்திரசேகரன், ஆசிரியர்கள் காஜா முகைதீன், கமலிஸ்ரீ, தற்காலிக ஆசிரியர்கள் மலர்விழி, நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
