×

பாஜ பிரமுகர் கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கு ஆயுள்: மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அதிரடி: பேரவை உறுப்பினர் பதவி இழப்பு

பெங்களூரு: கர்நாடக ஹுப்பள்ளி-தார்வார் மாவட்ட பாரதிய ஜனதா பிரமுகர் யோகேஷ்கவுடா, கடந்த 2016 ஜூன் 15ம் தேதி தார்வார் நகரில் அவருக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வினய்குல்கர்னி உள்பட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனனபட், பாஜ பிரமுகர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கர்னி உள்பட 17 பேரும் குற்றவாளிகள் என்று ஏப்.15ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

இவர்களுக்கான தண்டனை விவரத்தை நேற்று அறிவித்தார். அதன்படி குற்றவாளிகளான எம்எல்ஏ வினய்குல்கர்னி உள்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் வினய் குல்கர்னி தனது எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டார்.

Tags : Karnataka Congress ,MLA ,Baja Pramukar ,Court ,Bangalore ,Bharatiya ,Janata ,Pramukar Yogeshkwuda ,Hupalli-Dharwar District, Karnataka ,Dharwar ,congress ,
× RELATED 2 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம்...