×

ஆதவுக்கு எங்கிருந்து இவ்ளோ பணம் வந்துச்சு? தவெகவில் செலவழிக்கும் பணம் எல்லாம் எங்களோடது.. லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பகீர்

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது மகனும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் மார்ட்டின் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் எனது தாயாருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது என அவதூறு பரப்பி வருகிறார். பொதுவாக எனது தாயார் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இப்போது வரை நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எம்ஜிஆர்-ஐ புகழ்ந்து பேசிவிட்டு அவர் தொடங்கிய அதிமுகவில் இருந்து விலகி அரசியல் ஆதாயம் தேடி தவெகவில் இணைந்துள்ளார். லாட்டரி தொழில் வாயிலாக சம்பாதிக்கும் பணம் என்று அவர் பேசி வருகிறார்.

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு (மார்ட்டினின் மருமகன்) பணம் எப்படி வருகிறது. அவரை பணத்திற்காக மட்டும் தான் கட்சியில் வைத்துள்ளனர். ஒரு கூட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட அவரிடம் தான் பெறுகின்றனர். ஆதவ் அர்ஜூனா இல்லையென்றால் தவெகவே இல்லை. அக்கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டத்திற்கும் வெளிப்படையாகவே ஆதவ் அர்ஜூனா மட்டுமே செலவு செய்து வருகிறார். இது வெளிப்படையான உண்மை. அவருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது. அது யாருடைய பணம். தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரை திமுகவை விமர்சனம் செய்கிறாரே தவிர முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் இப்போது வரை சென்று பிரசாரம் செய்யவில்லை. இதனால் விஜய் தேர்தலுக்குப் பின் திமுக பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சாயந்திரம் 6 மணிக்கு மேல விஜய் ஆட்டோ ஓடாது: ஆளூர் ஷாநவாஸ் பங்கம்
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் அப்துர் ரகுமானை ஆதரித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ நேற்று பேசியதாவது: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை. அண்ணா திமுக தற்போது அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. பாஜ கைநீட்டும் இடத்தில் கையெழுத்து போடும் பிரதிநிதிகள் தான் தற்போது அதிமுக வேட்பாளராக நிற்கின்றனர். இரட்டை இலைக்கு போடும் ஓட்டு தாமரைக்கு போடும் ஓட்டு. மாலை 6 மணிக்குமேல் ஆட்டோ ஓடாது என வடிவேல் படத்தில் சொல்வது போல் விஜய் 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய மாட்டார். விஜய் கிறிஸ்துமஸ் கேக் வெட்டுகிறார். ஆனால் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும்போது கண்டிக்கவில்லை. ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தார். ஆனால் இஸ்லாமியர்கள் தாக்கப்படும்போது கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Aadhaar ,Thaveka ,Martin ,Bagir ,Leemarose ,AIADMK ,Lalgudi ,Lakshya Janmaka Party ,Jose Martin ,Trichy ,K.P. Krishnan ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...