×

அப்பா அப்பான்னு சொல்றவரு ஆஸ்பத்திரில இருக்கும் போது ஏன் அவரை பார்க்கல… இந்த கிழவனை கொல்லுங்கனு சொல்றாங்க அதை பார்த்து அன்புமணி சிரிக்குறாரு… இது நியாயமா? ஜி.கே.மணி கேள்வி

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அளித்த பேட்டி: அன்புமணி சிலரை வைத்துக்கொண்டு முகநூலில் எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு ஐயாவை அவமானப்படுத்துறாங்க. குறிப்பாக அவர் கூட இருக்கிறவங்க சில பேர், ‘இந்தக் கிழவனை கொண்டு வந்து ரோட்ல போடுங்க’, ‘இந்தக் கிழவனை தலையணைய வச்சு அமுக்கிக் கொல்லுங்க’, ‘தலை மேல கல்லப்போட்டுக் கொல்லுங்க’ – இப்போ ரெண்டு மூணு நாளா ஒரு செய்தி பரப்புறாங்க – ‘சிலிண்டரை பத்த வச்சு இந்தக் கிழவனைக் கொல்லுங்க’ அப்படின்னு. இதையெல்லாம் பார்த்து அன்புமணி சிரிக்கிறார்.

ஆனால் இந்த ஒரு வார்த்தையை மட்டும் தொடர்ந்து அவர் சொல்றாரு, அவருடைய மகள்களை விட்டு சொல்லச் சொல்றாரு. என்ன சொல்றாருன்னா, ‘என்னையும் எங்க அப்பாவையும் பிரிச்சது ஜி.கே.மணி’ அப்படின்னு சொல்றாரு. இந்த வார்த்தையைக் கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு. மனசு கஷ்டப்படுது. அவரையும் ஐயாவையும் பிரிக்க முடியுமா? எந்த சக்தியால பிரிக்க முடியும்? ஐயா, உங்க மகனைப் பார்க்காதீங்கன்னு சொல்றதுக்கு எனக்கு மனசு வருமா? அல்லது சொன்னாதான் ஐயா கேப்பாரா? நீங்களே சொல்லுங்க, கேப்பாரா? கேட்க மாட்டார்.

சரி, அன்புமணி ஐயாவைப் பார்க்கிறதுக்கு வந்தா, ‘நீங்க பார்க்கக்கூடாது’ன்னு நாங்க சொல்ல முடியுமா? சொல்லி அவரைத் தடுக்க முடியுமா? அவர் வர்றதை ஏன் வேணாம்னு சொல்றாங்க? அவர் வந்து பார்க்கலாமே? ஐயா கூட சேர்ந்து செயல்படலாமே? இப்போ மருத்துவமனையில ஐயா இருந்தபோது அன்புமணி வரலதானே? அவர் பேசுறாரு… வந்து அப்பாவைப் பார்க்கிறதை விட்டுட்டு, பாசம் இருந்தா அல்லது யாராவது தெரிஞ்சவங்களா இருந்தா கூட மருத்துவமனையில ஒருத்தர் சேர்ந்துருக்காங்கன்னா வந்து பார்ப்பாங்க, நலம் விசாரிப்பாங்க. பெத்த தகப்பன், வளர்த்து ஆளாக்குனவர், மத்திய அமைச்சர் பதவி கொடுத்தவர், தலைவர் பதவி கொடுத்தவர், இவ்வளவு உயரத்துக்கு ஆளாக்குன அப்பாவைப் பார்க்கிறதுக்கு மருத்துவமனைக்கு வரல.

வெளியில என்ன பேசுறாருன்னா, ‘அவருக்கு ஏதாவது நடந்ததுன்னா தொலைச்சுடுவேன், என்ன நடக்கும்னு தெரியாது பாருங்க’ன்னு பேசுறாரு. இதெல்லாம் ஒரு பேச்சா? இப்படி யாராவது கேப்பாங்க? உங்களுக்கு அப்பா மேல அக்கறையா இருந்தா நேரா ஓடி வந்திருக்கணும் மருத்துவமனைக்கு. அவர் வந்திருக்கணும், அவருடைய மனைவி வந்திருக்கலாம், அவர் பெண் குழந்தைகள் வந்திருக்கலாம், எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து பார்த்திருக்கலாமே?
அன்புமணி மகள்கள் அவங்களை விட்டு, ‘எங்க தாத்தாவைப் பார்க்க விடாம ஜி.கே.மணி பிரிச்சிட்டாரு’.

இதை உண்மைதான்னு நினைச்சுக்கிட்டு சில பேர் கண்ணீர் விட்டு அழுதுட்டு இருக்காங்க. எவ்வளவு பெரிய நாடகம்! இந்த நாடகம் நீண்ட நாளைக்கு எடுப்படாது. ஏம்மா, நான் ஏன் பிரிச்சேன்? அவங்க குழந்தைகளைக் கூட பார்க்க விடலையாம். அப்பா… என்ன அபத்தம்! இது நியாயமா? அடுக்குமா? யாராவது மக்கள் ஏத்துக்குவாங்களா? நீதிமன்றத்துல அபாண்டமா அன்புமணி சொல்றாரு, ‘ஐயா மனநலம் பாதிக்கப்பட்டாரு’ன்னு சொல்றாரு. அப்பாவே ‘மனநலம் பாதிக்கப்பட்டாரு’ன்னு சொல்றது யாருக்கு அவமானம்? இவ்வாறு அவர் கூறினார்.

* சட்டமன்றத்துக்கு ஏன் போட்டியிடுறீங்க?
‘‘சட்டமன்றத்துக்குப் போய் என்ன கிழிக்கப் போறீங்க’… என என்னை கேட்டார். அப்போ சட்டமன்றத்துக்குப் போய் ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்றவங்க, நீங்க எப்படி சட்டமன்றத்துக்குப் போட்டியிடுறீங்க? சட்டமன்றத் தேர்தல்ல… உங்க கூட இருக்கிறவங்க என்ன செய்யப் போறாங்க என்று கூறியவர் தான் அன்புமணி’’ என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.

Tags : Anbumani ,G.K. Mani ,PMK ,president ,Thailapuram garden ,Facebook ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...