×

வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி

அரூர், ஏப்.18: அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பலகட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரூர் தொகுதியில் 4 சுயேச்சைகளுடன் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்களின் சின்னங்கள் வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியில் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் தபால் ஓட்டு போடவும், அங்கேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இப்பணியில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தாசில்தார் வள்ளி, ரஞ்சித், எழில்மொழி, சின்னண்ணன், திருப்பதி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Aroor ,Aroor Divisional Commissioner ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...