நாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலைகனிமொழி எம்பி பார்வையிட்டார்

நாமக்கல், பிப். 23: நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையத்தில், மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர்  பூங்கோதை செல்லத்துரையின் பண்ணை தோட்டத்தில், மறைந்த தமிழ் அறிஞர்  சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விடியலை  நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, கடந்த வாரம்  நாமக்கல்லுக்கு வந்த மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, சிலை அமைக்கும் பணியை  நேரில் பார்வையிட்டார். அப்போது, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  ராஜேஸ்குமார், முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, சிலம்பொலி செல்லப்பன் மகன்  கொங்குவேள், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலு, மாநில மகளிர் தொண்டர் அணி  துணை அமைப்பாளர்கள் குமாரி, ராணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>