250 ஆண்டு ஆலமரம் வேரோடு வெட்டி சாய்ப்பு திரும்ப நட்டு பராமரிக்க மனு

நாமக்கல், பிப்.23: நாமக்கல் அடுத்த கோனூரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு விபரம்: கோனூரில் 250 ஆண்டுகள் பழமையான ஆலமரம், ஊரின் அடையாளமாக இருந்து வந்தது. மரத்தின் காய்ந்த கிளைகளை அப்புறப்படுத்த டெண்டர் எடுத்தவர்கள், இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத போது மரத்தை வேரோடு வெட்டி சாய்த்து விட்டனர். மரத்தை வெட்ட பயன்படுத்திய  பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை மடக்கி, விஏஓவிடம் ஒப்படைத்தோம். ஆனால் மரத்தை வெட்டியவர் மீது சட்டப்படி  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரியை விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே, வெட்டிய இடத்திலேயே மரத்தை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More