பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் திமுக ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

கிருஷ்ணகிரி, பிப்.23: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜ அரசையும், அதனை கண்டு கொள்ளாத அதிமுக அரசையும் கண்டிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில மகளிரணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் வரவேற்றார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், ராஜேந்திரன், பொன்.குணசேகரன், தம்பிதுரை, ராஜன், கோவிந்தன், கோவிந்தசாமி, கோவிந்தராசு, சுப்பிரமணி, செல்வம், சுவாமிநாதன், சாந்தமூர்த்தி, பாபு, பாபுசிவக்குமார், பாலன், பரிதாநவாப், டாக்டர் மாலதி, டாக்டர் கந்தசாமி, ரஜினிசெல்வம், தனசேகரன், செந்தில், அமீன், அஸ்லாம், துரை(எ)துரைசாமி, தமிழ்செல்வன், ரவிச்சந்திரன், மகேந்திரன், ஆலப்பட்டி வாசுதேவன், டேம்.பிரகாஷ், கங்கலேரி சந்திரசேகர், சவுந்தரராஜன், ஆட்டோ மோகன், திருமலைச்செல்வன், ஆறுமுகம், வேல்மணி, வாழை ரவி, சீனிவாசன், மதன், ஆனந்தன், கனல்சுப்பிரமணி, தேன்மொழி மாதேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓசூர்:ஓசூரில்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மாநகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை செயலாளர் விஜய்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ, சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஜெயராமன், சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னபில்லப்பா, ரகுநாத், குருசாமி, மாதேஸ்வரன், சீனிவாசன், எல்லோரா மணி, ராஜா, எல்பிஎப் கோபாலகிருஷ்ணன், ராமு, முருகேசன், வேணு, அசோக், சக்திவேல், சுமன், செந்தில்குமார், ரவிகுமார், வடிவேலு, மகளிரணி முனிரத்னா, தனலட்சுமி பார்த்திபன், சுனந்தா, சாந்தி, சந்திரலேகா, பாகலூர் முனிராஜ், சர்வேஷ், பிரகாஷ், ஸ்ரீதர்சிங், சுரேஷ், முருகன் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>