×

ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்

விருதுநகர், ஏப்.17: ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப் படியை காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும். 2026 பிப்.27ல் வெளியிடப்பட்ட உத்தரவில் உள்ள 5வது பத்தியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சண்முகம் தலைமையேற்றார். துவக்கி வைத்து ஏஐபிடிபிஏ மாநில உதவித் தலைவர் செல்வராஜ் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கங்களின் நிர்வாகிகள் கோவிந்தராஜன், ஜெபகுமார், புளுகாண்டி, முத்துச்சாமி ஆகியோர் பேசினர். முடிவில் ஏஐபிடிபிஏ மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

Tags : Union Government ,Virudhunagar ,BSNL ,
× RELATED வரத்து குறைவால் இளநீர் விலை கடும் உயர்வு