×

திருத்துறைப்பூண்டி சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

திருத்துறைப்பூண்டி, ஏப்.17: திருத்துறைப்பூண்டி சீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா தரிசனம் பெற்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள புகழ் பெற்ற சீரடி சாய்பாபா ஆலயத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை என்பதால் காலையிலிருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான பாபா பக்தர்கள் பாபாவை வழிபட சென்றனர். நேற்று காலையிலிருந்து பால், சந்தனம், நெய், தேன், பன்னீர், போன்ற பொருட்களால் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Tags : Thiruthuraipoondi Shirdi Sai Baba Temple ,Thiruthuraipoondi ,Shirdi Sai Baba Temple ,Nagai Salai ,Thiruthuraipoondi, Tiruvarur district… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...