×

கோட்டை பட்டினம் கடற்பகுதியில் சாரண சாரணியர்களுக்கு கடல் வழி பயிற்சி

இலுப்பூர் , ஏப்.17: அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசுப்பள்ளி சாரண சாரணிய மாணவர்கள் கடல்வழி பயிற்சி மேற்கொண்டனர். அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி மேல்நிலைப் பள்ளியை சார்ந்த சாரண சாரணிய மாணவர்கள் சாரணஇயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவல் புத்தக வழிகாட்டுதலின்படி ஒரு சாரண மாணவன் என்றால் என்ன என்பதை அறிதல்பற்றியும் அதில் கடல் சார் வாழ்க்கை, நீச்சலின் முக்கியதும்.

எவ்வாறு இடர்பாடுகளை எதிர் கொள்ளும் முறையை அறிந்துகொள்ளுதல் பற்றி குறிப்புகள் வழங்கியுள்ளதை பின்பற்றும் பொருட்டு தலைமையாசிரியர் இளஞ்சேகரன் வழிகாட்டுதலின்படி சாரண ஆசிரியர் தயாநிதி மற்றும் மாணவர்கள் கடற்வழி பயணமாக மணமேல்குடி, கோட்டை பட்டினம் கடற்பகுதியில்பாரத சாரண சாரணியர் இயக்கம் பயணம் மேற்க்கொண்டனர். இதில் கடல் சார் தொழில்கள் அவர்களின் வாழ்க்கை முறை, இயற்கை சீற்றங்களை அவர்கள் கையாளும் விதம்.எப்படி தங்களை தற்காத்து கொள்வது பற்றி பல்வேறு தகவல்கள் மீனவர்கள் வழியாக மாணவர்கள் நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

 

Tags : Kottayam ,Ilupur ,Mannavellampatti Government School ,Annavasal ,Mannavellampatti Higher Secondary School ,Baden Powell ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...