×

முதல்வர் அறிவித்தது என்னாச்சு? சிவன் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணியில் சுணக்கம் சிவகாசி மக்கள் கவலை

சிவகாசி, பிப். 23: சிவகாசி சிவன் கோயிலில் ரூ.3 கோடியில் ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது என்ன ஆனது என்று பக்தர்கள், பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவகாசி என பெயர் வர காரணமாக இருந்த சிவகாசி  சிவன் கோயில் ராஜகோபுரம் இல்லாமல் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கோயில்களில் கடந்த 10 ஆண்டில் பல கோயில்கள் புனரமைக்கபட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவகாசியில் உள்ள  பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்களிடையே மிகுந்த  மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி தெய்வீக பேரவை சார்பில் 2011ல் அனைத்து சமூதாய மக்களிடம் நிதி திரட்டி சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலுக்கு புதிதாக தங்கத்தேரும் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சிவகாசி  சிவன் கோயிலில்  ராஜகோபுரம் கட்ட  ரூ.3 கோடி சிறப்பு நிதி  வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி பல  மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை ராஜகோபுரம் கட்டும் பணி துவக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிவகாசி சிவன் கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். பிரதோஷம் மற்றும் திருவிழா நாட்களிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே, ராஜகோபுரம் அமைக்கும் பணியை அரசு உடனடியாக துவங்க  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,Shiva temple Rajagopuram ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை