×

நடிகரை பிடித்திருந்தால் விசில் அடிக்கலாம் நாட்டை தரமுடியாது: விஜய் மீது பிரகாஷ்ராஜ் தாக்கு

பழநி: நடிகரை பிடித்திருந்தால் விசில் அடிக்கலாமே தவிர நாட்டை கொடுக்க முடியாது என பழநி பொதுக்கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து கலைக்குழு கூட்டம் நேற்றுமாலை நடந்தது. இதில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு பேசியதாவது: தேசிய முற்போக்கு கூட்டணியின் முன்னெடுப்பு டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல. டப்பா இன்ஜின் சர்கார். தற்போதைய தேர்தல் களத்தில் திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் என மும்முனை போட்டி நிலவுகிறது. திராவிட மாடல் கல்வி கொடுத்துள்ளது. இந்தியாவிற்கே பல திட்டங்களில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மொழி, இனம், மானம் காக்கிறது. அடிமை மாடல் சுயமரியாதையை இழந்து நிற்கிறது. அடிமை மாடலுக்கு வெட்கம், சூடு, சொரணை இல்லை. மதுரையை மணிப்பூராக்க திட்டமிடுகிறது. சினிமா மாடல் என் அளவிற்குக்கூட அரசியல் பேசுவதில்லை. நடிகரை பிடித்திருந்தால் விசில் அடிக்கலாம். நாட்டை ஆள கொடுக்க முடியாது. தற்போதைய தேர்தல், ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags : Prakashraj ,Vijay ,Palani ,Palani, Dindigul district ,Marxist Communist Party ,Pandi ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...