×

மக்களுக்கான திட்டங்களை எடப்பாடி செயல்படுத்துவார் ஜி.கே.வாசன் பிரசாரம்

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து, தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று மாலை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, சவுமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது ஜிகே.வாசன் பேசுகையில், `தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், அன்புமணி எம்பியாக இருந்தபோது, இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார். அவரது வழியில் சவுமியா அன்புமணியும் சிறப்பாக செயல்படுவார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக அரசு அமைவது உறுதி. தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கான திட்டங்களை எடப்பாடி செயல்படுத்துவார். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். எனவே, பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.

Tags : G.K. Vasan ,Edappadi ,Dharmapuri ,Dharmapuri Vallalar Thidal ,PMK ,Soumya Anbumani ,National Democratic Alliance ,DHA ,President ,Soumya… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...