×

ராஜபாளையம் ஒன்றிய கண்மாய்களில் மீன் ஏலம் ரத்தால் ரூ.76 லட்சம் இழப்பீடு பிடிஓ, மேலாளர் தன்னிச்சையான முடிவா?

விருதுநகர், பிப்.23: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம் ஒன்றிய இளைஞர் அமைப்பினர் பிரபாகரன் தலைமையில் மனு அளித்தனர். இதன் பின் கூறுகையில், ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 கண்மாய்களில் மீன் பசலி ஏலம் கடந்த இரு ஆண்டுகளாக நடக்கவில்லை. பொது ஏலம் நடத்துவது தொடர்பாக அறிவிப்பை தொடர்ந்து, சிலருக்கு சாதகமாக ஏலம் விடாமல் பொது ஏலம் விட வலியுறுத்தி இருவாரங்களுக்கு முன் கலெக்டரிடம் மனு அளித்தோம்.
ஏல பங்கேற்பு முன்தொகை ரூ.5 ஆயிரம் செலுத்தி, பிப்.18ல் ஏலத்தில் பங்கேற்க சென்ற போது எவ்வித காரணமின்றி ஏலம் ரத்து செய்து விட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலரும், மேலாளரும் கலெக்டர் கூறியதால் ரத்து செய்தாக தெரிவித்தனர். இதனால் ஒன்றியத்திற்கு ரூ.76 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கலெக்டர் ஏலத்தை ரத்து செய்ய முறையான அறிவிப்பு செய்யாத நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரும், மேலாளரும் தன்னிச்சையாக செய்திருக்கின்றனர். கலெக்டர் தலைமையில் பொது ஏலம் விட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : Rajapalayam Union eyes BDO ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ